டெல்லியில் அப்போது எடை பார்க்கும் கருவியை நேரு திறந்து வைக்கிறார் , காமராஜர் ,காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் எல்லோரும் உடன் இருக்கிறார்கள் ,நேரு திறந்து வைத்த பின்பு ஒவ்வொருவராக காலணா போட்டு தங்கள் எடையை பார்க்கிறார்கள் ,அனைவரும் காமராஜரை அழைக்க அவர் ஒதுங்கி ஒதுங்கி போகிறார் ,அப்போது நேரு சொல்கிறார் "விடுங்கள் அந்த காலணா கூட அவரிடம் இருக்காது" என்று
சிறிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட ஊழல் பணத்தில் கோடி பணத்துடன் ஏசி காரில் போகும் இந்த காலத்தில் பிரதமர்களை நியமிக்கும் அதிகாரத்தில் இருந்த ஒரு மனிதர் இப்படி வாழ்ந்தார் என்பதை நிச்சயம் எதிர்காலம் நம்ப மறுக்கும்
No comments:
Post a Comment