Monday, 26 January 2015

ஜாதியும் தமிழ் தேசமும்

ஜாதி இல்லை என்பவன் தான் தமிழன்!
ஜாதி மதம் எல்லாம் ஆரியர்களால் உருவாக்கபட்டது!!
இது தான் தமிழகத்தில் பலரும் கூருவது.

உண்மையில் ஆதி தமிழர்கள் ஜாதிகளை கடைபிடித்தார்களா அல்லது பலரால் பல்வேரு காலக்கட்டங்களில் அது உருவாக்கபட்டதா?

இதற்கான பதில் தமிழனின் ஆதி நூலான தொல்காப்பியத்தில் தான் உள்ளது

இந்த  தொல்காப்பியம் ஐந்து வகையான இனக்குழுக்களையும் ஐந்து வகையான தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும் காட்டுகிறது
அவை
முல்லை-காடும் காடு சார்ந்த நிலமும்
குறிஞ்சி-மலையும் மலை சார்ந்த நிலமும்
மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்
பாலை-முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம்
நெயதல்- கடலும் கடல் சார்ந்த நிலமும்

ஐந்நிலத்தவர்கள்:
*குறிஞ்சி: (குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி,கானவர்)
*முல்லை: (இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்,கோனார்  )
இன்றைய யாதவர்கள்.
*மருதம்: (மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்)
இன்றைய தேவேந்திர குலத்தார்

*நெய்தல்: (சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்)

*பாலை: (விடலை, காளை, மறவர், மறத்தியர்)

இவர்கள் தான் உண்மையான தமிழ் சாதிகள் 
(இது தொல்காப்பியத்தில் உள்ளது. இது வரை கிடைத்த தமிழ் நூல்களில் மிக மிக பழமையான நூல் இது மட்டுமே.)


Saturday, 10 January 2015

யானைகளை பற்றிய சில வியப்பூட்டும் செய்திகள்



1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.


3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான்.
ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான்
காத்துக்கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள்
கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில்
உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

Thursday, 8 January 2015

REGE.NUMBR DETAILS ALL TAMIL NADU

1 TN01 - CHENNAI(CENTRAL)
2 TN02 - CHENNAI(NORTH-WEST)
3 TN03 - CHENNAI(NORTH-EAST)
4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-EAST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-WEST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLORE
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAYAM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUTH)
49 TN38 - COIMBATORE(NORTH) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(CENTRAL)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENTRAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - UDUMALPET

Tuesday, 6 January 2015

இராமதேவ சித்தர்


யாக்கோபு சித்தர் இவரைப் பற்றி அறிய முயலும்போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. இவரது காலத்தை திட்டமிட்டு அனுமானிக்க இயலவில்லை. ஆனால் ஒன்று, இவர் காலத்தில் இந்து தர்மம் மட்டுமல்ல, இஸ்லாமிய தர்மமும் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் இவருக்கு தரிசனம் தந்திருக்கிறார் என்பதும், இவரைப் பற்றி அறியமுற்படும்போது தெரியவருகிறது. ஆயினும், அதில் எந்த அளவு உண்மை இருக்கமுடியும் என்று கேட்டு அதை ஆராய்வதை விட, அதை நம்பி இன்புறுவது மனதை விசாலமாக்குகிறது. நாகப்பட்டினத்தில் வாழ்ந்து இறுதியில், மதுரை அழகர் கோயிலில் சித்தியடைந்ததாக காணப்படும் யாக்கோபு சித்தரின் வரலாறு, சித்தர்கள் வரலாற்றிலேயே ஒரு தனித்தன்மை உடையதாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் சித்தபுருஷர்கள் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. நமது நெறி முறைகள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டவை. கல்வி, கேள்விகளில் ஒருவர் மேதையாக வேண்டும் என்றால், முதலில் பள்ளிக்குச் சென்று ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தேர்ச்சி பெற்று, பின் கல்லூரி, பல்கலைக் கழகம் என்று உச்சிக்குச் செல்வது போன்றது நமது ஆன்மிக நெறி. சித்தர்களின் நெறிமுறை இப்படிப்பட்டதே அல்ல. பிறக்கும்போதே ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி அளவு ஞானமுடன் பிறந்துவிட்ட சித்த புருஷர்கள் பலர் உண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கூட ஒன்று, இரண்டு என்று படிப்படியாகச் செல்வது போலல்லாமல், ஒரே நாளில் குருநாதரின் நேத்ரதீட்சையால் முழுமையான ஞானம் பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான்_ பின்னாளில் யாக்கோபு என்று அழைக்கப்பட்ட ராமதேவர். நாகப்பட்டினத்தில் சுற்றிவந்த ராமதேவருக்கு, தான் ஒரு கூட்டுப் புழுபோல இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றிட, அவர் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினார். இந்த உலகம் முழுவதும் சென்று வர வேண்டும்; எல்லா இடங்களிலும் மனித வாழ்வு எப்படி உள்ளது என்று பார்த்து விடவேண்டும்.; எங்கே நல்லது இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பொதுமையாளன் ஆக வேண்டும் என்பது ராமதேவனின் எண்ணம். அந்த வகையில், காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, சட்டநாதர் என்னும் சிவமூர்த்தியின் லிங்க ரூபம் கண்ணில்பட்டது. 
                                        சிவமூர்த்தியின் ஆங்கார சொரூபத்தில் தோன்றிய சரபேஸ்வரத்தின் அம்சம் கொண்டது அந்த லிங்கம். சங்கநாதன் என்று விஷ்ணுவையும், சட்டநாதன் என்று சிவத்தையும் சூட்சுமப் பெயரில் குறிப்பிடுவார்கள். சட்டநாத ரூபம் அகந்தையை அடக்கவல்லது. பணிவைத் தந்து பரந்த நோக்கை உருவாக்குவது. இது தெரிந்தோ தெரியாமலோ ராமதேவர் அதன்மேல் பக்தி கொண்டு, அப்படியே பூசனையும் புரிந்தார். அன்று இரவு, அவர் கனவில் ‘இந்த கங்கைக் கரையை விட உனது ஊரான நாகப்பட்டின கடற்கரையில் நானிருக்க விரும்புகிறேன்’ என்று அந்த சட்டநாதர் கூறிட, ராமதேவரும் மிக மகிழ்ந்து, அதை அங்கிருந்து நாகப்பட்டினம் கொண்டு வந்து ஸ்தாபித்தார். இந்த சட்டநாதர் மிக விசேஷமானவர். ஓடும் நதிக்கரையில் தோன்றி, அது கூடும் கடலிடம் வந்து சேர்ந்த இவருடைய பின்புலத்தில் பல சூட்சுமங்கள் உள்ளன. ராமதேவர் வழிபட்ட சட்டநாதர், ராமதேவருக்கு பல சித்திகளை அந்தக் கடல்போலவே வாரி வழங்கினார். இதனால் ராமதேவர் பல சித்துக்களை எளிதில் பெற்றார். அப்படியே உடம்பை வெல்லும் வைத்ய நெறிமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தி மூலிகை தேட ஆரம்பித்தார். அந்தத் தேடலில் அவருக்கு ஓர் உண்மை புலனானது. அதுதான் பூகோள ஞானம். இந்த மண்தான் உயிர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறது. காற்றோடும், நீரோடும், ஒளியோடும் கூடி அந்தரம் எழும்பி, இது மனித குலத்துக்கு உணவைத் தருகிறது. அந்த உணவும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. எல்லாவித உணவு வகைகளும் எல்லா இடங்களிலும் விளைந்து விடுவதில்லை. மலையில் விளையும் தேயிலையும் காபியும் தரையில் பட்டுப் போய் விடுகின்றன. தரையில் விளையும் சில பயிர்களோ மலையில் விளைய மறுக்கின்றன. 
                                     இடத்துக்கு இடம் பஞ்சபூத கலவையில் மாறுபாடு இருப்பதால் தட்பவெப்பம், மண்சத்து, காற்றில் குளிர், பொழுதுகளில் வெப்பம் என்று எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாட்டிற்கு ஏற்பவே தாவரங்கள் வளருகின்றன என்பதைப் புரிந்து கொண்ட ராமதேவர், எங்கே ஒருவர் பிறக்கிறாரோ அங்கே விளையும் பொருள் எதுவாக இருப்பினும் அங்கே பிறந்தவரை அது எதுவும் செய்யாமல், அவருக்கு அது பொருந்தி விடுவதையும் பார்த்தார். அதாவது_ பூகோளமானது, மனித உடம்பையும் தன் வசம் வைத்துக் கொண்டு ஆட்டிவைப்பதையும் உணர்ந்தார். பனிமலையில் பிறந்து வளரும் ஒருவன் உடம்பு, அந்த மலைக்காட்டின் ஈரத்திற்கு ஈடு கொடுப்பதாக உள்ளது. ஆனால் தரையில் வசிப்பவன் அங்கு சென்றால், குளிரால் நடுங்கித் துன்புறுகிறான். பூகோளமானது இப்படி மனித உடம்பையும் கட்டுப்படுத்துவதை உணர்ந்தவர், உடம்பில் ஏற்படும் வியாதிகளோடு தனது பூகோள ஞானத்தை பொருத்திப் பார்த்து ஆய்வுகள் செய்தார். வெம்மை நோயால் இங்கு ஒருவர் பாதிக்கப்படுகிறார். ஆனால், வெப்பப் பிரதேசமான அரபு நாடுகளில் வாழ்பவர்களை வெப்பம் பெரிதாக பாதிப்பதில்லை. நீர்வளமே இல்லாத அந்த மண்ணில் அவர்களுக்கு நீர்ச்சத்து எதிலிருந்து, எப்படிக் கிட்டுகிறது? என்பதெல்லாம் ராமதேவரின் கேள்விகளாயின. இதனால் உலகம் முழுக்க சுற்றி வரப் புறப்பட்ட ராமதேவர், மெக்கா நகரின் வறண்ட சூழலிலும் அங்கு பல அற்புத மூலிகைகள் இருக்கக் கண்டார். 
                                      பூகோள அமைப்பில் அங்கே ஒரு விசையும் இருப்பது புலனானது. பல லட்சம் முகம்மதியர்கள் அது தங்களை கடைத்தேற்றும் இடம் என்று மன ஒருமையோடு வழிபடுவதால் அங்கே அருள் அலைகளும் பரவியிருந்தன. இதை தன் தவ உடம்பால் உணர்ந்த ராமதேவருக்கு, மெக்காவை விட்டு வர மனமே இல்லாது போயிற்று. அங்கேயே தங்கி தன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட ராமதேவர், அங்கு நோயால் துன்புற்றவருக்கு தானறிந்த மருத்துவத்தால் அங்குள்ள மூலிகைகளையும் சேர்த்து சிகிச்சையளிக்க... அதனால் பெரிய நிவாரணம் ஏற்பட்டது. இதனால் அங்கே ராமதேவருக்கு பெரிதும் வரவேற்பு கிட்டியது. கூடவே, ஓர் அன்னியன் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முற்படுவதா? என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட... ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அங்குள்ளோர் ராமதேவரை யாக்கோபுவாக்கினர். யாக்கோபுவான ராமதேவரும் குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார். ஏற்கெனவே சித்த ஞானம் கை கூடி இருந்ததால் மன ஒருமை மிக இலகுவாக ஏற்பட்டதில் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனமும் யாக்கோபுவுக்குக் கிட்டியதாகக் கூறுவர். அதன் எழுச்சியாக, பதினாறு நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாகவும் கூறுவர். அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா? எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா? உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா?’ என்று போகர் கேட்க, யாக்கோபுவான ராமதேவருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது. மெக்காவை விட்டு நீங்கிய ராமதேவர், மீண்டும் நாகை வந்து, சட்டநாதரை வணங்கி, தான் மெக்காவில் அறிந்தவற்றை தமிழிலும் எழுதினார். அதுவே ‘ராமதேவ வைத்ய சாரம்’ என்ற நூலானது. 
                                        இதை சிலர் ‘யாக்கோபு சாஸ்திரம்’ என்றும் கூறினர். இந்த வைத்ய முறை, மற்ற சித்த வைத்ய முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. ரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு, வெம்மை நோய்கள் போன்றவற்றுக்கு இவரது வைத்தியம் பெரிதும் கை கொடுத்தது. பின்னாளில் ராமதேவருக்கு பல சித்த புருஷர்களின் தரிசனம் கிட்டியது. அவர்களில் காலாங்கி நாதரும் ஒருவர். காலாங்கி நாதர் உபதேசம் ராமதேவரான யாக்கோபுவை தவத்தில் மூழ்க வைத்தது. நெடுங்காலம் தவமியற்றிய ராமதேவருக்கு மேலும் பல சித்திகள் ஏற்பட்டன. திரும்பவும் மூலிகை தேடிப் புறப்பட்ட ராமதேவரால், பொதிகைக்கும், சீனத்துக்கும் ஆகாயமார்க்கமாக நினைத்தவுடன் சென்று வர முடிந்தது. பின் கொல்லிமலை, தென்கயிலாயம் எனப்படும் சதுரகிரித்தலம் என பல தலங்களுக்குச் சென்று அங்கே தங்கி ஆய்வு செய்தவர், இறுதியாக மதுரை அழகர் மலைக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார். அழகர்மலை, சிலகாலம் சமணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இங்கே நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராட இந்திரன் முதலான தேவர்கள் வருவர் என்பது புராண வழிச் செய்தியாகும். இந்த மலையின் பின்புறத்தில் சைவம், வைணவம், சமணம் முதலிய பலவித ஆன்மிக நெறிகளின் சங்கமம் உள்ளது. எவ்வளவோ மலைத்தலங்கள் இருப்பினும் அழகர் மலைத் தலம் அவைகளில் பெரிதும் மாறுபட்டு, தட்பவெப்ப சூழலில் உலகின் எல்லாவித தட்பவெப்ப நிலை அமைப்பையும் தன்னகத்தே கொண்டிருப்பது. வெப்பம், குளிர், வசந்தம், வேனில் என்று எல்லாவித பருவங்களிலும் ஒரு சமமான, மிகையிலாத்தன்மை உடையது என்பர். எனவே ராமதேவராகிய யாக்கோபு சித்தர், தன் அந்திமக்காலத்தை இங்கேயே கழித்து இறுதியாக இங்கேயே சமாதியானார் என்பர்! நாகப்பட்டினத்தில் அனுதினமும் அம்பிகையின் நினைவாக வாழ்ந்து கொண்டிருந்த சித்தர்தான் இராமதேவர். 
                                     சித்தர்கள் அனைவரும் சக்தி வழிபாடு உடையவர்கள்.அண்டத்தின் சக்தியைப் பிண்டத்தில் அறிந்து வழிபட்டவர்கள் சித்தர்கள்.அகத்தெளிவும் சமுதாய ஈடுபாடும், மனச்சான்றின் பேரெழுச்சியும்தான் சமயம் என்பதை வலியுறுத்தியே சித்தர் பூசா விதிகளை வரையறுத்துள்ளனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற மெய்யுணர்வு பெற்றவர்கள் சித்தர்கள். மனிதர்கள் அனைவரும் உதட்டில் ஒரு குணமும், உள்ளத்தில் ஒரு குணமுமாக வேடமிட்டு வாழ்வதை எண்ணி வேதனைப்பட்டு, மனம் வெம்பி அன்றாடம் தேவியுடம் கண்ணீர் விட்டழுவதும்அரண்டுவதும் சித்தர் இராமதேவர் வழக்கமாக இருந்தது. இதே சிந்தையுடன் விரக்தியுமாய் நாகபட்டினத்திலிருந்து காசிக்குச் சென்றார். கங்கை நதியில் மூழ்கி குளித்து விட்டு கரையேறும்போதுகங்கைக் கரையோரத்தில் சட்டைநாதர் சுவாமியின் விக்ரகம் ஒன்று அவருக்கு கிட்டியது. பக்தகளின் துணையோடு இராமதேவர் சட்டைநாதரின் விக்ரகத்தை நாகபட்டினம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தார். இரவு பகலாக இடையறாது சட்டைநாதரை உருகி வழிபாடு செய்து வந்தார். வழிபாட்டின் பயனாக பல சித்தர்களின் அபூர்வத் தொடர்புகள் ஏற்பட்டன. தொடர்பின் பயனாக சித்தர்கள் பலரும் இராமதேவரை வேண்டினர். “ இராமதேவரே! மக்கா நகரில் பல அபூர்வமான சக்தி வாய்ந்த கல்ப மூலிகைகள்  ஏராளமாகஉள்ளன. அவை யாவும் உயிர் காக்கும் மூலிகைகள் மட்டுமல்ல இமைக்கும் நேரத்தில் பலனைக் கொண்டு வரும் மந்திர சக்தி வாய்ந்த மூலிகையாகும். மக்கள் நலத்திற்காக அந்த மந்திர மூலிகைகளின் இரகசியங்களால் இந்த உலகையும், உயிரையும் காக்கும் பொருட்டு, நீங்கள் மக்கா நகருக்குச் சென்று வாருங்கள் “ என்றனர். 
                                                       நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவான மந்திரங்களை “அதர்வணாங்கிரஸ்” என்று வேதம் கூறுகிறது. அவற்றிம் வெளிப்பாடாகவே அன்றைய சித்தர்கள் மந்திர தந்திர ஜாலங்களையும்,மந்திர மூலிகைஇரகசியங்களையும் பரிபாஷையாகத் தெரிவித்துள்ளனர்.இராமதேவர் இயற்றிய ‘பூஜாவிதிப் பாடல்கள்’’ இதனை ஆதி என்றமணிவிளக்கு எனப் போற்றினார். 
ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்’ 
அகண்டபரி பூரணத்தை காண வேண்டும், 
சோதியென்ற தூய்யவெளி மார்க்க மெல்லாஞ் 
சுகம் பெறவே மனோண்மணியென் னாத்தாள் தன்னை 
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம் 
நிற்குணத்தி நினின்ற நிலை யாரும் காணார், 
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று 
விளங்குவதும் பூசையிது வீண்போ காதே. 
[தியானத்தின் போது குண்டலி சிரசை அடைந்து புருவ மத்தியில் வெண்ணிறவொளியாய் காட்சி தரும் இதுவே பரிபூரண இன்பமாகும். மனோன்மணியேகுண்டலி சக்தியாகும்.மனோன்மணியைப் பெண் சக்தியாக பரிபாஷையில் சித்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆத்தாள்(அகத்தாள்) எனவும்,தாயாகவும் கருதுகிறார்கள். அகத்தில் பேரொளியாய் சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறார்கள்சித்தர்கள்] 
                                                    அந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி குண்டலினி யோகத்தாலும், இரசமணி சித்தியாலும்,குளிகையாலும் நாகப்பட்டினத்திலிருந்து மக்கா நகரத்துப்  பாலைவன மணலில் வந்துசேர்ந்தார்.வறண்ட பாலைவனம் எங்கும் மணல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல். ஒட்டங்களின் வரிசை.அப்போதுதான் இராமதேவருக்கு மிகபெரிய சோதனை வந்து சேர்ந்தது.தங்கள் நாட்டில் யாரோ அந்நியன் புகுந்து விட்டதைக் கண்டு, கூட்டமாய் அரேபியர்கள் இராமதேவரைச் சூழ்ந்து கொண்டனர்.’’யார் நீ…. திடிரென்று இந்த இடத்திற்கு எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? தீன் தேசத்துக்குள் உன் வரவின் நோக்கம் என்ன? உண்மையிலேயே நீர் யார்? உன்னைக் கொல்லாமல் நாங்கள் விடபோவதில்லை” என்று அலறினார்கள். ‘’ அய்யா, இங்கு வருவது தவறு என்று எனக்குத் தெரியாது.’’ ‘’ அப்படியென்றால் நீ வேற்று மதத்துக்காரானா? உனக்கு இங்கு என்ன வேலை?’’ ‘’ அய்யா, நான் தவசாதனையில் ஈடுபட்டுள்ள சித்தர். எல்லா மதமும் சம்மதமே. நான் மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை.எனக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்.இங்குள்ள உயிர்காக்கும் கல்ப மூலிகைகளுக்காகவே நான் வந்தேன்’’ ‘’ ஓ! நீங்கள் தவயோகியா? சித்தரா? நீங்கள் இங்கே தங்க வேண்டுமானால் மதம் மாற வேண்டும். மத வேறுபாடு நீங்கள் பார்ப்பது இல்லை என்பது உண்மையானால் அதற்குச் சம்மதிக்கிறீர்களா?’’ ‘’ சம்மதிக்கிறேன்” ‘’ இனிமேல் நீர் குரான் ஓத வேண்டும் ‘’ “எல்லாம் இறைவன் செயல்” என்று கூறிய இராமதேவர், அன்று முதல் யாக்கோபுவாக மதம் மாறினார்.மக்கா நகரத்து மனிதர் யாவருடனும் இன்முகத்துடன் பழகினார்.
                                                அங்குள்ள காயகல்ப மூலிகைகளைக்கண்டறிந்து அவற்றை சாதனைக்குப் பயன்படுத்தியதுடன் மற்றவருக்கும் அதன் மகத்துவம் பற்றிஎடுத்துரைத்தார்.மக்கா நகரின் இசுலாமிய மக்களிடையே இரண்டறக் கலந்து அவர்களின் நோயகற்றும் மருத்துவராக இருந்து எல்லா காலங்களுக்கும் பயன்படும்படியான மருத்துவ நூல்களை அராபிய மொழியில் பாடி வைத்தார்.அங்குள்ள நபிகள் நாயகம் சமாதியைத்  தொழுது துதித்து வருவதை யாக்கோபுச் சித்தர் வழக்கமாகக் கொண்டு வந்தார். ஒருநாள் ஆகாயம் அதிரும்படியான பெருத்த ஓசை ஏற்பட்டது. அன்பர்கள் அனைவரும் குரானை ஓதித்தொழுத போது யார் கண்ணிலும் படாமல் நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் காட்சி தந்தார். ஆத்ம அநுபவம், தெய்வ நுட்பம் போன்ற உயரிய சாதனைகள் பற்றி நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் உபதேசித்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் அதன்பின் சமாதி நிலையடைய விரும்பி அதற்காக சாதகம் செய்து வந்தார். மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் எண்ணா நிலைக்காதிருக்குமானால் அதுவே சாமதி. ஒரு பூரணத்துவம் வாய்க்கப்பெற்ற சித்தர் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தாம் உடலுடன் இருக்கும் போது நினைவு, செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் சேர்ந்து விடுவார்.பரத்தோடு சேர்ந்து பரப்பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்களாகி விடுவார்கள். அரேபிய நாட்டின் பல்வேறு கல்பமூலிகைகளைப் பற்றி அறிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து போகர் சித்தர் மக்காவுக்கு வந்திருக்கின்ற செய்தி அறிந்து யாக்கோபுச் சித்தர் அவரை எதிர்கொண்டு வரவேற்றார். காயசித்தி,யோகசித்தி,கற்பசித்தி அனைத்தும் பெற்றவர் சித்தர்லலவா போகர்! முதன் மையான சித்தராக போகர் கருதப்படுகின்றார். 
                                             போகமுனிவர் யாக்கோபுச் சித்தருக்கு உபதேசம் செய்தார். ”மக்காவில் யாக்கோபுவாகவும், தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கின்ற நீ சமாதி அடைய வேண்டி காலம் இதுவல்ல. இந்தப் பூதலத்தில் உன்னால் பலரும், பாமர மக்களும் பயன் கிட்டியபின் நீ சமாதி நிலை நாடுவதுதான் சரியான வழி” போகமுனிவரிடம் அவ்வாறு உபதேசம் பெற்ற யாக்கோபுச் சித்தர் அதன்பின் தம்முடைய ஒப்பற்ற சித்தியால் யார் கண்ணிலும் தென்படாது அங்கிருந்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் காடு,மலைஎல்லாம் சுற்றி அலைந்து திரிந்தார்.தம்மை சந்தித்தவர்கள் எல்லார்க்கும் உபதேசம் செய்ததுடன் பிரச்சனைகளைக் களைந்து மகிழ்வித்தார். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும்; காலனை போன்ற நெருப்பானவர் என்றும்; காலனால்நெருங்க முடியாதவர் என்றும் கூறப்படும் காலங்கிநாதர் எனும் சித்தரின் ஆசியைப்பெற விரும்பினார் யாக்கோபுச் சித்தர். பலயுகம் கடந்து வாழ்ந்துவரும் காலங்கிநாதர் ரிஷிகள் பலரின் ஆசீர்வாதங்களைப்பெற்றவர். எனவேதான் யாக்கோபுச் சித்தர் அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்பினார். ஒருநாள்காலங்கிநாதர் சமாதி முன் சென்று அவர் வணங்கிபோது சமாதியிலிருந்து அவர் வெளிப்பட்டுயாக்கோபுச் சித்தரை ஆசீர்வதித்தார்.தம்முடைய அனுபவ இரகசியங்களை யாக்கோபுச் சித்தருக்குஉபதேசித்தார். தான் சமாதிநிலை அடைய இதுவே சரியான தருணம் என முடிவுசெய்து தமது சீடர்களை அழைத்தார் ’’சீடர்களே நான் இப்போது சமாதியில் அமரப் போகிறேன். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு சமாதியிலிருந்துமீண்டும் நான் எழுந்து வருவேன்,நான் சாமதியிலிருந்து வெளிவரும் காலத்தில் இங்கு பல அற்புதங்கள்நிகழும். விலங்குகள் கூட ஞானம் பேசும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும். இது போன்ற அடையாளங்கள்நான் திரும்பி வரும் நாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்போது சமாதியைமூடிவிடுங்கள்.” என்று கூறியபடி யாக்கோப்பு சித்தர் சமாதி உள்ளே சென்று விட்டார். “மாயத்தைக் கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போது கர்த்தனைக் கலந்துகொள்வார் ” என அகத்தியருக்கு கந்தபெருமான் அட்டமாசித்தி உரைத்தன் பொருளாய் யாக்கோபுச் சித்தர்உடம்போடு சமாதி நிலை கொண்டார்.
                                             யாக்கோபுச் சித்தர் சமாதிக்குள் போனவர் இறந்துவிட்டார் என்றேமக்கள் யாவரும் நம்பினர். அவரது சீடர்களும் பல இடங்களுக்கு சென்றுவிட்டனர். யாக்கோபுச் சித்தர்மீண்டும் வரமாட்டார் என்று சீடர்களும் நம்பினார்கள்.ஆனால் ஒரு சீடர் மட்டுமே நம்பிக்கையோடுசமாதிக்கருகிலேயே இருந்து வந்தார். அந்த சீடரின் நம்பிக்கை வீண் போகவில்லை.தன்னுடைய குருநாதர்கூறியதைப்போலவே சமாதியிலிருந்து எழுந்து வந்ததைக் கண்டு சீடர் மகிழ்ந்தார். “குருவே! தாங்கள் சமாதிக்குள் சென்ற பின்பு மக்கள் எல்லோரும் தாங்கள் இறந்து விட்டதாகவும்,தங்களிடம் சித்து ஏதும் இல்லை என்றும் கேலி பேசினார்கள்” என்று சீடர் கூறியதைக் கேட்டார்.“சீடனே! அவ்வாறு கூறியதில் தவறு இல்லை.இந்த உடல் நிலையானதல்ல.என்றேனும் ஒருநாள் மண்ணுக்குஇரையாகத்தான் வேண்டும்.நான் மீண்டும் சமாதியில் இறங்க்கப் போகிறேன். முப்பது ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் வருவேன்.என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் கண்கள் குருடாகப் போய்விடும்” என்று யாக்கோபுச் சித்தர் கூறியபடி மீண்டும் சாமதிக்குள் இறங்கிச் சென்று விட்டார். கேலி செய்த மக்கள் யாக்கோபுச் சித்தர் சாபத்தினால் கண் பார்வை அற்றவர்களாயினர். தங்கள் தவறைஅவர்கள் உணர்ந்தனர்.கண் பார்வை கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் வருந்தினர். தங்களுக்குக் கண்பார்வை வேண்டி யாக்கோபுச் சித்தர் சமாதியிலிருந்து வெளியே வரும்வரை அவர்கள்யாவரும் சமாதிக்குப் பூஜை செய்து வணங்கிக் காத்திருந்தனர். நீண்ட காலம் என்பதால் அதில் பலர் இறந்தும் போய்விட்டனர். 
                                            முப்பதாண்டுகள் கழித்துச் சமாதியில் இருந்து எழுந்து வந்த யாக்கோபுச் சித்தர் நடந்தது யாவும் அறிந்தார். தன்னிடம் மன்னிப்பு கோரியவர்களுக்கெல்லாம் அவர்களின் குறைபாடுகளை போக்கிஅருள் புரிந்தார். அதன் பின் உலகிலிருக்கும் பற்று நீங்கப்பெற்றவராக யாக்கோபுச் சித்தர் நிரந்தர சமாதிக்குள்சீடர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார். 
தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு; 
தனதான் நூற்றெட்டுக் குள்ளே சித்தி 
ஆனென்ற அண்டர்பதி யெட்டு மாடும்; 
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்; 
கோனென்ற கோடிசித்துக் கனத்தி லாடுங் 
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று; 
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று; 
வளர்பிறையின் செய்தவனே யோகி யாமே. 
[ குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் எழுப்ப 108 மாத்திரையால் கும்பிக்க மூலாதாரம் சித்தியாகும்.இந்த மூலாதார சித்தியால் தேவலோங்கள் வசப்படும்.64 மூலிகைகளின் இரகசியங்கள் வெளிப்படும்.எந்த மூலிகை எப்படி இருக்கும்என்பது சித்தர்க்கு மட்டுமே தெரியும். இச்சித்தியை ரேவதி நட்சத்திர நாளில்செய்யலாம்.அல்லது எட்டாம் திதியாகிய அட்டமியில் செய்யலாம். இதனைவளர்பிறையில் செய்தவன் யோகியாவான். ] 
                                            சித்தர்களின் பாடல்கள் யாவும் பெரும்பாலும் அவர்களின் அனுபவத்தால்முகிழ்ந்தவைகள். பொதுவாக சித்தர்களின் பாடல்களுக்கு அகராதியில் பொருள் தேடக்கூடாது. சித்தர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு வித பரிபாஷையை முதலில் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின் பாடல்களுக்கு பொருள் தேட முயற்சிக்க வேண்டும்.சித்தர்களின் பாடல்களுக்கு எளிய தமிழ் அகராதிகளில் பொருள் தேடிப்படிப்பது தவறானதாகி விடும். சித்தர் பாடல்களுக்கென்றே சில அகராதி இருக்கின்றன. அவற்றைத் தேடிப்படித்தல் நலம் பயக்கும்

Thursday, 25 December 2014

உழவும் பசுவும் ஒழிந்த கதை

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்க முடியாது ..நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கான பசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

Wednesday, 24 December 2014

ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார்

* இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று *
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே!

Tuesday, 23 December 2014

ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார் வள்ளுவர்!

வான்புகழ் வள்ளுவர், ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார். இந்திய அரசு, திருவள்ளுவரின் பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், திருவள்ளுவரின் சிலையை நிறுவ, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாம். 'சிலையை வைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்து வருகிறோம். இதன் மூலம் இந்தியாரஷ்யா இடையேயான கலாசாரப் பரிமாற்றம், நட்புறவு மேம்படும்’ என்று இந்தியாவுக்கான ரஷ்யத் துணைத் தூதர், கோட்டோவ் (Kotov) தெரிவித்துள்ளார். வாழ்க வள்ளுவம்!