Monday, 21 July 2014

நடிகர் சிவாஜி நினைவுகள்

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறப்பு:
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
ஆரம்பகால வாழ்க்கை
சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.
திரையுலக வாழ்க்கை:
திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.
தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார்.
விருதுகள்:
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...!

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...
* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...
* Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...
* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...
* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...
* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...
* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...
* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...
* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...
* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...
* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...
* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...
* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...
* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...
* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...
* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...
* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...
* அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...
* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...
* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...
* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...
* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...
* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...
* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...
* பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...
* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...
* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது..!

Thursday, 17 July 2014

”காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார்” 1961-ம் ஆண்டு பிரபல வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி...

“தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”
“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”

“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”
“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”
“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”
“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”
“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”
“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”
“மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”
“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”
“எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”
“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா… ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்:-

மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)
பூலித்தேவன் (1715-1767)
வாண்டாயத் தேவன்
பெரிய காலாடி
வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர்
மருது பாண்டியர்
மருதநாயகம் (1725-1764)
விருப்பாச்சி கோபால நாயக்கர்
கட்டபொம்மன் (1760 - 1799)
தீரன் சின்னமலை (1756-1805)
மயிலப்பன் சேர்வைகாரர்
சின்ன மருது மகன் துரைச்சாமி
வீரன் சுந்தரலிங்கம்
வடிவு
ராமச்சந்திர நாயக்கர்
தூக்குமேடை ராஜகோபால்
சுத்தானந்த பாரதி
மோகன் குமாரமங்கலம்
சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
மேயர் டி. செங்கல்வராயன்
சாவடி அருணாச்சலம் பிள்ளை
தூத்துக்குடி பால்பாண்டியன்
முத்துவிநாயகம்
டி. என். தீர்த்தகிரி
ஏ. பி. சி. வீரபாகு
எம். சங்கையா
கல்கி டி.சதாசிவம்
ஸ்ரீநிவாச ஆழ்வார்
தியாகி விஸ்வநாததாஸ்
திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்
மதுரை பழனிகுமாரு பிள்ளை
ஹாஜி முகமது மெளலானா சாகிப்
தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
அகினி திராவக அபிஷேகம்
கவி கா.மு.ஷெரீப்
எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
பி. சீனிவாச ராவ்
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
வீரன் வாஞ்சிநாதன்
எஸ். என். சோமையாஜுலு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ப. ஜீவானந்தம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
ஐ. மாயாண்டி பாரதி
புதுச்சேரி சுப்பையா
ஜி. சுப்பிரமணிய ஐயர்
வெ. துரையனார்
கோடை எஸ். பி. வி. அழகர்சாமி
வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
சுப்பிரமணிய சிவா
எம். பி. டி. ஆச்சார்யா
ஆ. நா. சிவராமன்
ம. பொ. சிவஞானம் கிராமணியார்
என். எம். ஆர். சுப்பராமன்
அ. வைத்தியநாதய்யர் மதுரை
டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு
செண்பகராமன் பிள்ளை
சேலம் ஏ. சுப்பிரமணியம்
குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
வ. வே. சுப்பிரமணியம்
வ. உ. சிதம்பரனார்
திரு. வி. கலியாணசுந்தரனார்
மகாகவி பாரதியார்
ராஜாஜி
திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
திருப்பூர் பி. எஸ். சுந்தரம்
பி. வேலுச்சாமி
தர்மபுரி குமாரசாமி
க. சந்தானம்
புலி மீனாட்சி சுந்தரம்
சீர்காழி சுப்பராயன்
கு. ராஜவேலு
மட்டப்பாறை வெங்கட்டராமையர்
முனகல பட்டாபிராமையா
பெரியகுளம் இராம. சதாசிவம்
திண்டுக்கல் மணிபாரதி
தேனி என். ஆர். தியாகராஜன்
பழனி கே. ஆர். செல்லம்
மதுரை ஜார்ஜ் ஜோசப்
மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
பி. எஸ். சின்னதுரை
செங்காளியப்பன்
கே. வி. ராமசாமி கோவை
தியாகி வைரப்பன் வேதாரண்யம்
திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி
திருச்சி பி. ரத்னவேல் தேவர்
திருச்சி டி. எஸ். அருணாசலம்
பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு
ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
ம. சிங்காரவேலர்
சர்தார் வேதரத்தினம் பிள்ளை
கே. பி. சுந்தராம்பாள்
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பாஷ்யம் என்கிற ஆர்யா
திருப்பூர் குமரன்
காம்ரேட் பி. ராமமூர்த்தி
பி. கக்கன்
தி. சே. செள. ராஜன்
டி. கே. மாதவன்
பூமேடை ராமையா
எம். பக்தவத்சலம்
கு. காமராசர்
ரா. கிருஷ்ணசாமி நாயுடு
சி. பி. சுப்பையான் கோவை
கோவை என். ஜி. ராமசாமி
கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
தீரர் சத்தியமூர்த்தி
தோழர் கே. டி. கே. தங்கமணி
கோ. வேங்கடாசலபதி
கோவை அய்யாமுத்து
முஹம்மது இஸ்மாயில்
ச. அ. சாமிநாத ஐயர்
லீலாவதி
பங்கஜத்தம்மாள்
அம்புஜம்மாள்,
கடலூர் அஞ்சலையம்மாள்
மூவலூர் இராமாமிர்தம்
நீலாவதி இராம. சுப்பிரமணியம்
முத்துலட்சுமி ரெட்டி
அசலாம்பிகை அம்மையார்
கண்ணம்மையார்
நாகம்மையார்
கே.கே.எஸ். காளியம்மாள்
எஸ். என். சுந்தராம்பாள்
வை. மு. கோதைநாயகி
செல்லம்மா பாரதி
மீனாம்பாள்
மணலூர் மணியம்மா
கே. பி. ஜானகியம்மாள்
இலட்சுமி சாகல்
கோவிந்தம்மாள்
ஜானகி ஆதி நாகப்பன்
இராசம்மா பூபாலன்
இராமு தேவர்

எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. 

Wednesday, 16 July 2014

ராவணன் சிங்களனா, வட இந்தியனா, தமிழனா?


இலங்கை தேசியவாதிகள் ராவணன் சிங்களன் எனவும் இந்திய படைகள் ராமன் தலைமையில் அவனை அழித்து இந்தியமேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தின எனவும் கூறுகின்றனர்

ராவணன் ஹெலவம்சம் எனவும் ஹெலவம்சத்தில் யக்க,நாக,அசுர,ராக்ஷச என நான்கு இனங்கள் இருந்ததாகவும் இலங்கைதேசியவாதிகள் கூறுகின்றனர்.ராவணன் பேசியது ஹெலபாஷை.ஹெலபாஷை தான் திரிந்து சிங்கள பாஷையானதாகவும் கூறுகின்றனர்.இது பற்றி பிகே பாலசந்திரன் எழுதிய கட்டுரையில் இலங்கையின் ஹெலா இயக்கத்தை பற்றி குறிப்பிடுகிறார்.ஹெலா இயக்கம் இந்திய கலாசார ஆதிக்கத்தை கைவிட்டு ஆதி சிங்கள கலாசாரத்துக்கு செல்ல சிங்களை வலியுறுத்துகிறது.சிங்கள தேசியவாதியான அஹிபுது எழுதிய சாக்விதி ராவணா (1988) நூலில் ராவணனின் சிங்கள வேர்கள் விவரிக்கபடுகின்ரன.ரா என்றால் சூரியன் எனவும் வணா என்றால் வம்சம் எனவும் விளக்கம் அளிக்கபடுகிறது.

முனிதாச குமாரதுங்க ராவணன் சிங்கள மொழியில் ஆறு மருத்துவநூல்கள் எழுதினதாக கூறுகிறார் (Nadi ParikshaArka PrakashataUddisa ChiktsayaOddiya ChikitsaKumara Tantraya and Vatina Prakaranaya),.இவை பின்னாளில் சமஸ்கிருதத்துக்கு மொழிபெயர்க்கபட்டனவாம்.

இந்தியர்களும் ராவணனுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். ராவணனுக்கு இரு கோயில்கள் உள்ளன.ஒன்று மத்தியபிரதேசத்தில் உள்ள ராவணநகர்  கிராமத்தில் இருக்கிறது.அங்கே உள்ள 6000 கன்யாகுப்ஜ பிராமணர்கள் தம் குலமுன்னோரான ராவணனை வணங்குகின்றனர்.அங்கே 10 அடி உயரமுள்ள் ராவணபாபா சிலை இருக்கிறது.தினசரி பிரசாதமாக பூரியும், பாதாம்கீரும் வழங்கபடுகிறது

இன்னொன்று தென்னிலங்கையில் உள்ள இலா நீர்வீழ்ச்சி அருகே உள்ளது.அங்கே சிங்களர்கள் ராவணனை வணங்குகின்றனர்.ரோஹன என்ற பெயரில் இருக்கும் சிங்கள நகர்களும் பெயர்களும் ராவண என்பதன் திரிபே என தெரிகிறது.

ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே மண்டோர் என்ர ஊர் உள்ளது.அந்த கிராமத்தவர்கள் மண்டோதரி தம் ஊரை சேர்ந்தவள் எனவும் ராவணன் தம் மருமகன் எனவும் கூறுகின்றனர்

Tuesday, 15 July 2014

காலணா இல்லாத காமராஜர்


டெல்லியில் அப்போது எடை பார்க்கும் கருவியை நேரு திறந்து வைக்கிறார் , காமராஜர் ,காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் எல்லோரும் உடன் இருக்கிறார்கள் ,நேரு திறந்து வைத்த பின்பு ஒவ்வொருவராக காலணா போட்டு தங்கள் எடையை பார்க்கிறார்கள் ,அனைவரும் காமராஜரை அழைக்க அவர் ஒதுங்கி ஒதுங்கி போகிறார் ,அப்போது நேரு சொல்கிறார் "விடுங்கள் அந்த காலணா கூட அவரிடம் இருக்காது" என்று

சிறிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட ஊழல் பணத்தில் கோடி பணத்துடன் ஏசி காரில் போகும் இந்த காலத்தில் பிரதமர்களை நியமிக்கும் அதிகாரத்தில் இருந்த ஒரு மனிதர் இப்படி வாழ்ந்தார் என்பதை நிச்சயம் எதிர்காலம் நம்ப மறுக்கும்